ஆப்கானிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுத்தது அமெரிக்கா

ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க ஆளில்லா ட்ரோன்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஐ.எஸ் கோராசான் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கிழக்கு ஆப்கானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தான் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அண்மையில் காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு பழிவாங்க ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதலை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் காபூல் விமானநிலைய வாயில்களில் உள்ள தங்கள் நாட்டுமக்கள் உடனே வெளியேற அமெரிக்கா உத்தவிட்டுள்ளது.