வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள் அபாய இடமாக மாற்றமடைகின்றது!

வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்படும் பகுதியாக இருப்பதாக சுகாதார தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார தரப்பினரால் பல்வேறு முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் சுகாதார தரப்பினருக்கு உதவியாக கிராம மட்டத்திலிருந்து தற்காலிக சுகாதார பணி உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கிராமமட்ட அமைப்புக்களின் உதவிகளை பெற்று அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களையும் கண்காணிக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.