இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 கொவிட் மரணங்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை

இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596 பேரும் நாட்டில் உயிரிழந்தனர். ஆனாலும் தற்போதைய மூன்றாவது அலையில் 7548 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.