எலுமிச்சையில் இவைகள் அதிகம் நிறைந்துள்ளதால் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் அருந்தி வந்தால் எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நம் உடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணம் பாக்டீரியா தான் இதற்கு எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்துவதால் உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும் இதனால் உடலில் ஏற்படும் நோய் தொற்று அபாயங்கள் குறையும் அதே போன்று நம் உடலில் செரிமானம் சரிவர நடைபெறவில்லை என்றால் பலவிதமான உடல் உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும்.
எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்தும் போது அது உடலில் உள்ள அனைத்து கசடுகளை வெளியேற்றுவதால் செரிமான பிரச்சனை இல்லாமல் போய்விடும். பொதுவாக மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கி உடலும் புத்துணர்ச்சி பெறும்.
சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்தது போல் அழுத்தமாக இருக்கும் இவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடனே காற்று வெளியேறி வயிறு லேசாக மாறிவிடும்.
அதேபோன்று எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் அடுத்து உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம் நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும்.
இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும் மன பதட்டம் கொண்டவர்களும் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைச்சாறு கலந்து குடித்து வரலாம்.
பித்தத்தை குறைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும் கடுமையான வறட்சியை போக்கும் ரத்தத்தை சுத்தமாக்கும் குடல் சுத்தம் அடையும் சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை தண்ணீரின் முழுமையான பலனை அடைய வேண்டுமென்றால் பிரஷ்ஷான பலத்தை பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறிந்த பலத்தை பயன்படுத்த கூடாது.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை வெறும் வயிற்றில் என்றல்ல எந்த நேரத்திலும் சாப்பிடலாம் இரவு நேரத்திலும் கூட சாப்பிடலாம் மேலும் சூடான வெந்நீரில் கலக்கக் கூடாது. ஏனென்றால் அதில் உள்ள பிராண சக்தி போய்விடும் எனவே வெதுவெதுப்பான வெந்நீர் மற்றும் சாதாரண தண்ணீர் போதுமானது.