தற்போதைய நெருக்கடிக்கு இது ஒன்றே தீர்வு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 720 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்ற போதே இவ்விடயத்தைத் தெரிவித்தார்.