கொரோனா பரவல் காரணமாக நாட்டிற்கு மிக பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு கடந்த ஒரு வருடகாலமாக 1500 பில்லியன் ருபாய் இழப்பை சந்தித்துள்து என நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் அட்டிகல தெரிவித்துள்ளார்.
2020 மார்ச்சில் கொரோனா வைரஸ்பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கை பல்வேறு செலவீனங்களை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிவாரணங்களிற்கு தொழில்நுட்ப சேவைகளை செய்வதற்கு தனிமைப்படுத்தல் சேவைகள் நிலையங்களைமுன்னெடுப்பதற்கு என பலவிடயங்களிற்கு அரசாங்கம் புதிதாக நிதியை செலவிடவேண்டிய நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது சுற்றுலாத்துறை வருமானங்கள் உட்பட ஏனைய வருமானங்கள் குறைவடைந்துள்ளன என வும் அவர் தெரிவித்துள்ளார்.