பொதுவாக பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.
இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.
முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம். இதற்கு இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
நெய், தேங்காயெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என தினமும் ஒன்றை உதட்டில் தடவி கொள்ளுங்கள். குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் இதை தடவி வருவதன் மூலம் உதட்டின் கருமையை நீக்க செய்யலாம்.
எலுமிச்சையை நீர்த்து அதில் தேன் கலந்து உதட்டில் தடவி ஸ்க்ரப் செய்து 20 நிமிடங்கள் விட்டு மந்தமான நீரில் கழுவி எண்ணெய் தடவி வர வேண்டும். கற்றாழை ஜெல்லையும் எண்ணெய்க்கு மாற்றாக தடவலாம். இரவு நேரத்தில் இதை தடவி மறுநாள் காலை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளை சர்க்கரையை இலேசாக பொடித்து வைத்துகொள்ளுங்கள். இதனுடன் காஃபித்தூள் சேர்த்து கலந்து ஸ்க்ரப் செய்யலாம். அல்லது ஓட்ஸ், அரிசிமாவு கலந்தும் ஸ்க்ரப் செய்யலாம். உதடு மென்மையான சருமம் கொண்டது. விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்து 5 நிமிடங்கள் விட்டு பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
உதடு கருமை இருப்பவர்கள் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் வகைகளை தவிர்க்க வேண்டும். கெமிக்கல் இல்லாத லிப்ஸ்டிக் பயன்பாடு நல்லது. அதிகமாக லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது அவை உதட்டை வறட்சிக்குள்ளாக்கலாம்.
லிப் பாம் தேர்வு செய்யும் போது நிறமில்லாதவற்றை தேர்வு செய்வது நல்லது. நல்லது. லிக்விட் லிப்ஸ்டிக் வேண்டாம். இவை உதட்டை ட்ரை ஆக்கும். இரவு தூங்கும் போது லிப்ஸ்டிக் உதட்டை சுத்தம் செய்து தூங்குவது உதடுக்கு பாதுகாப்பானது.