நாட்டில் மேலும் 216 கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும், 101 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான 5பேரும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.