காபூலில் அமெரிக்கா இராணுவம் 73 போர் விமானங்களை விட்டுச் சென்றுள்ளது!

ஆப்கான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமெரிக்க துருப்புக்குள் அங்கிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.

இந்நிலையில் காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டதாக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது என்றும் தாலிபன்களால் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறிய அவர், அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 லட்சம் டாலர் மதிப்புள்ள 70 ராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 Humvees ராணுவ டிரக்குகளையும் செயலற்றதாக மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு தேவை என்பதால், ராக்கெட் எதிர்ப்பு கருவியான C-RAM மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டு அதன் பின்னர் செயலற்றதாக மாற்றப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி கூறினார்.