இந்தியாவிற்கு தலிபான்களால் ஆபத்து நேரிடாது!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா முக்கியமான நாடு என்றும், அதற்கு ஒருபோதும் தாலிபான் அச்சுறுத்தலாக இருக்காது எனவும் தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

“எங்களால் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் என்பது அறவே இருக்காது. இந்தியாவுக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

பாகிஸ்தான் உடன் தொடர்ந்து இணைந்து பயணிக்க விரும்புகிறோம். பாகிஸ்தான் எங்களுக்கு இரண்டாவது வீடு. இரு நாட்டு எல்லைகள், மக்கள், மதம் என அதற்கான காரணங்கள் நீண்டு கொண்டே போகிறது. அதே நேரத்தில் அனைத்து நாடுகளுடனும் இணக்கமாக இருக்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார் அவர்.

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தாலிபான் பாகிஸ்தான் பக்கம் நிற்குமா? என்ற கேள்விக்கு இந்த பதிலை அவர் தந்துள்ளார்.