பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது.

அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

பீட்ரூட் ரத்தசோகை குணமாகும் உடலின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பீட்ரூட்டில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க தேவையான இரும்புச்சத்து ஃபோலேட் வைட்டமின் போன்ற புதிய ரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.

தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தும் நபர்களுக்கு பிரச்சனைகள் நீங்கும்.