வளைகாப்பு நிகழ்ச்சியில் வெண்பாவை அசிங்கப்படுத்திய அஞ்சலி: பாரதியின் திருமண ரகசியத்தை அறிந்த கண்ணம்மா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த காட்சியில் அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்துகின்றனர். இதற்கு கண்ணம்மா தனது குழந்தை லட்சுமியுடன் வருகை தந்ததுடன், அஞ்சலியை அனைவரும் ஆசீர்வாதம் செய்கின்றனர்.

அத்தருணத்தில் அஞ்சலி பாரதியை அழைக்க பாரதியும் அவருடன் வெண்பாவும் வரவே, அஞ்சலி வெண்பாவிற்கு சரியான பதிலடி கொடுத்து உண்மையை உடைத்துள்ளார்.

அஞ்சலி வெளியிட்ட உண்மையினைக் கேட்ட கண்ணம்மா பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார். இப்புரொமோவை அவதானித்த ரசிகர்கள் அடுத்த நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.