நியூசிலாந்தில் இலங்கையர் சுட்டுக்கொலை!

நியூசிலாந்தின் ஆக்லாந்திலுள்ள அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நியூசிலாந்திலுள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்ற நிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். வணிக வளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வெளியே ஓடுவதைக் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.