போதைப்பொருள் வழக்கில் விசாரிக்கப்படும் ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகின்றார். அதிலும் தெலுங்கு திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் சிங் இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஆஜராகினார்.

தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் தொடர்ந்து சில வருடங்களாக போதப்பொருள் வழக்கில் விசாரணையை சந்தித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு பூரிஜெகன்நாத் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார், அதை தொடர்ந்து நடிகை சார்மியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று ராகுல் ப்ரீத்சிங் விசாரணைக்கு ஆஜரானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, செப்டம்பர் 6ம் தேதி பாகுபலி நடிகர் ராணா ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.