ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிலவற்றுக்கு மட்டும் அனுமதி!

ஆப்கானிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாக அரியனா ஆப்கன் ஏர்லைன்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானை பாதுகாத்து வந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் கூடிய விரைவில் புதிய அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை தாலிபான்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். அதே நேரம் வெளிநாட்டு ராணுவ படையை உதவிக்கு அழைத்து நாட்டை விட்டு தப்பிக்க நினைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தாலிபான்கள் வீடு வீடாக சென்று மரண பயத்தை தூண்டி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாக அரியனா ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் தமிம் அஹ்மதி கூறியது, ஆப்கனில் இன்று விமான சேவைகளை தொடங்க தலிபான்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக நேற்று வெளியானது. இந்நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.