தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதன் பிறகு அந்த படத்திலிருந்து அட்லீ வெளியேறிவிட்டார், ஷாருக்கானுக்கு கதை பிடிக்கவில்லை, மீண்டும் விஜய்யை வைத்து அட்லி இயக்க போகிறார், என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் Ok வாங்கி அட்லி. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அது தவிர தற்போது தமிழ் காமெடி யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் என்ற படங்களில் யோகிபாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.