90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. மிகவும் குடும்ப பாங்கான படங்களாக தேர்வு செய்து நடித்து மக்களை கவர்ந்தவர்.
பட வாய்ப்புகள் கொஞ்சம் குறைய ஆரம்பித்ததுமே சீரியலில் நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்த கோலங்கள் சீரியல் செம சூப்பர் ஹிட்.
சீரியலுக்கு பின் சினிமா பக்கமே தேவயானி வரவில்லை, தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தான் தேவயானி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது தேவயானி ஈரோடு பக்கத்தில் உள்ள தனது சொந்த ஊரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாராம்.
அவரது மனை பக்கத்தில் பிளாட் விற்பதை கேள்விப்பட்ட அவர் அந்த மனையில்2 ஏக்கரை வாங்கியுள்ளார். அதில் செண்டுமல்லியை தற்போது அவர் பயிரிட்டுள்ளாராம்.
விவசாய நிலத்தை அனைவரும் பிளாட்டாக மாற்றி வர தேவயானி பிளாட்டை விவசாய நிலமாக மாற்றியிருப்பதை கண்டு மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்களாம்.