தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார்.
தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்.
இதனிடையே, கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, 2 வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது உறுதியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்..