யாழில் 213 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாவட்டச் செயலகம் இணைந்து வெளியிட்டுள்ள இன்றைய (06) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்டிஜன், மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வேலணையில் 09 பேர், ஊர்காவற்றுறையில் பத்துப் பேர், யாழ்ப்பாணத்தில் 2 பேர், நல்லூரில் 33 பேர், சண்டிலிப்பாயில் 68 பேர், உடுவிலில் 35 பேர், தெல்லிப்பழையில் ஒருவர், கோப்பாயில் 17 பேர், பருத்தித்துறையில் 32 பேர், மருதங்கேணியில் ஒருவர், யாழ் சிறைச்சாலையில் ஒருவர், யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒருவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.