கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படின், அவர்களுக்கு அது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி போடப்படாத மற்றும் வைரஸால் பாதிக்கப்படாதவர்கள் குணமடைந்ததைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். ரஞ்ஜித் பட்டுவந்துடவா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகள் மருத்துவமனையின் அறிவுறுத்தலின் படி அவர்கள் வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மூச்சுத் திணறல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சுவாச அமைப்பின் நிலையை தீர்மானிக்க சிறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.