நீர்கொழும்பு – தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீக்காயங்களுடன் வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது எனப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 89 வயதுடைய குறித்த பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.