யாழில், வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.