சந்திரமுகி பாகம் 2ல் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தில் பிரபு, விஜயகுமார், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என திரைப் பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு தான் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.
ஆனால், தற்போது இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகையாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் தற்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.