அண்ணாத்த திரைப்படத்தின் முதற்பார்வை நாளை வெளியாகிறது….

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதற்பார்வை நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு கடந்த 2 வருடங்களாக எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், கொரோனா காரணமாக அனைத்தும் தள்ளிப்போனது.

இந்த படத்தின் முதற்பார்வை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில், நேற்று வரை படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்தது.

இந்நிலையில், இன்று சன் பிக்சர்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாத்த திரைப்படத்தின் முதற்பார்வை நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.