படுக்கையில் உயிர் பிரிந்த தாய்.. அருகில் அமர்ந்து கதறிய சிறுவன்!

இந்தியாவில் தெலுங்கானா மாவட்டத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல், சிறுவன் ஒருவன் அவரைக் கட்டிப்பிடித்து உறங்கியதுடன், காலையில் கண்விழிக்காததைக் கண்டு அவன் கதறியழுத புகைப்படம் கல்நெஞ்சை கரைய வைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ரி கொத்த கூடம் மாவட்டம் வரராவ் பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள், பலூன் விற்கு பிழைப்பு நடத்தி வந்தவர் நிர்மலா(45). நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது 7 வயது மகன் கிருஷ்ணாவுடன் சாலையோரத்தில் தங்கி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிர்மலா கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் அந்த பகுதியில் மழை பெய்ததன் காரணமாக அவரால் மருத்துவமனைக்கு செல்லாமல் தனது மகனுக்கு உணவு செய்து கொடுத்து வந்துள்ளார்.

காலை முதல் இரவு வரை குளிர்காற்றிலேயே இருந்த வந்த அவர் நேற்று இரவு, தனது மகன் கிருஷ்ணாவுக்கு அருகில் உறங்கினார். பொழுதும் விடிந்தது, கண்விழித்து பார்த்த மகன் கிருஷ்ணாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தாய் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. பலமுறை தாயை எழுப்ப முயற்சித்த கிருஷ்ணா அழத் தொடங்கிவிட்டான்.

எவ்வளவோ கதறியும் தாய் கண்விழிக்கவே இல்லை, இதனால் சாலையில் செல்பவர்களை தனது தாயிடம் அழைத்து வந்து எங்கள் அம்மா எழுந்திருக்கவில்லை என்பதை காட்டினார்.

தாய்க்காக கதறிய கிருஷ்ணாவை தேற்றி அவர்கள், அவனின் தவிப்பை கண்டு, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் கதறி அழுதனர். சிறுவனின் பரிதவிப்பு கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது.

பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் தாய் நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனையடுத்து அந்தப் பெண்ணிடமிருந்து ஆதார் அட்டையை வைத்து ஹைதராபாத் மற்றும் வாராங்கல்லில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நிர்மலா தனது கணவரை விட்டுப் பிரிந்த மகனுடன் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிந்தது. தற்போது சிறுவன் கிருஷ்ணா நிர்மலாவுக்கு தெரிந்த மற்றொரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.