அண்ணாத்த பட அப்டேட்!

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தியன்று காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.