பாடசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தைக் கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.

பாடசாலைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நாடு முழுவதும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டுதல்களை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசேட வைத்தியர்கள், தொழிநுட்ப மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் வழிகாட்டுதல்களை தயாரித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.