வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்குவது எப்படி

முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது.

இதனால் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து முக பருக்கள் மற்றும் கரும்புள்ளியை எப்படி நீக்கலாம். அந்தவகையில் கரும்புள்ளியை நீக்க கூடிய ஒரு சூப்பரனா டிப்ஸ் ஒன்றை இங்கே பார்ப்போம்.

தேவையானவை

வெங்காயம் – சிறியது 1
பூண்டு பல் – 1
செய்முறை

முதலில் வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் ஒன்றாக அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகளில் தடவி அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு முகத்தை கழுவி விடவும். அதன் பிறகு எரிச்சல் இல்லாமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். தினமும் ஒரு முறை இதை செய்தால் போதும்.

கரும்புள்ளிகளை போக்க இந்த பேஸ்ட்டை முயற்சி செய்யலாம். பூண்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

வெங்காயம் தோலில் உள்ள வடுக்கள் மற்றும் கறையை அகற்றுவதில் அற்புதங்களை செய்கிறது. இது முகத்தில் இருண்ட புள்ளிகளை குறைக்க இவை இரண்டும் ஒன்றாக வேலைசெய்கின்றன.