நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும். இஞ்சியின் வாசனை மற்றும் சுவை பல்வேறு உணவுகளில் அதன் சுவையை அதிகரிக்க உதவும்.
அதில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. தேநீர், குக்கீகள், சாக்லேட்டுகள், காக்டெய்ல் மற்றும் மருந்துகளில் கூட இஞ்சி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக இஞ்சி டீயை அதிகமாக எடுத்து கொண்டால் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்து என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது இஞ்சி டீயை பகுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இஞ்சி டீயை குறைந்தே அளவிலேயே பருக வேண்டும். இதனால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். மேலும் வயிறு எரிச்சல், வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நம் உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்து அசிடிட்டியை உண்டாக்கும்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களும் கூட இஞ்சி டீயை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து ஹைபோகிளைசீமியா உண்டாகும்.
இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளது போலவே வலி நீக்கி உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. அது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்கிவிடும்.
இஞ்சி டீ குடிப்பதால் அமைதியற்ற மற்றும் தூக்கமற்ற நிலை உருவாகும். சிலருக்கு அது தூக்கத்தை கெடுப்பதால், படுக்க போகும் முன்பு இஞ்சி டீயை பெரும்பாலும் தவிர்க்கவும். ஏனெனில் பல மணிநேரத்திற்கு தூக்கம் வராமல் போகலாம். அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உயிருக்கே கூட அது ஆபத்தாய் முடியும்.