கர்ப்பிணி பெண்களுக்கு நாவல்ப்பழம் ஏற்றதா?

நாவல்பழம் துவர்ப்பும், இனிப்பும் இலேசான கசப்பும் கொண்ட பழம். மென்மையான சதைப்பற்றை கொண்டுள்ள இது ஊட்டச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது.

இருப்பினும் இதனை கர்ப்பகாலத்தில் நாவல் பழம் சாப்பிடுவதால் குழந்தையின் சருமத்தில் சிறிய கரும்புள்ளிகளை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை.

அதே நேரம் கர்ப்பிணிகள் இதனை எடுத்து கொள்ளலாமா? கூடாதா என்ற குழப்பமும் உள்ளது. தற்போது இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கர்ப்பமாக இருக்கும் போது நாவல் பழம் எவ்வளவு சாப்பிடலாம் ?

தினசரி ஆறு முதல் ஏழு பழங்கள் வரை சாப்பிடலாம். இது பாதுகாப்பான அளவு என்று கருதப்படுகிறது. இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பிரச்சனையும் உண்டாகாது.

இதை தினசரியாக நீங்கள் எடுத்துகொள்ள விரும்பினால் அன்றாட ஊட்டச்சத்தில் நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய அளவு குறித்து அறிந்துகொள்ளவும்.
பக்கவிளைவுகள்

அதிகப்படியான பழங்கள் எடுத்துகொண்டால் சில பக்கவிளைவுகள் உண்டாகலாம். நாவல் பழம் ப்ளம்ஸ் ஆக்ஸலேட் நிறைந்தவை. இது கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு சிறுநீரக கற்களை உண்டாக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன.

தொண்டை மற்றும் மார்பில் எரிச்சல் ஏற்படலாம். நுரையீரலில் கபம் அதிகரிக்க செய்யலாம்.

கர்ப்பகாலத்தில் நாவல் பழம் எடுக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

நாவல் பழத்தை வெறும் வயிற்றில் எடுக்க கூடாது. பால் குடித்த பிறகு இந்த பழத்தை எடுத்துகொள்வது தவிர்க்கவும்.

இது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இலேசான புளிப்பு சுவை கொண்டது. எனினும் இது குறித்து முன்னெச்சரிக்கை கூற்றுகளை ஆதரிக்க எந்த அறிவியல் கூறுகளும் இல்லை.

நாவல் பழ அளவு குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து எடுத்துகொள்ளுங்கள்.