உடல் எடையை குறைக்க உதவும் பானம்

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை.

ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் , இரத்த அழுத்தம், பிசிஓடி, மூச்சுத் திணறல், சோர்வு இப்படி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

இதனை எளியமுறையில் குறைக்க வேண்டுமாயின் இயற்கை பானங்களை தயாரித்து குடித்து வரலாம்.

அதில் வெல்லம் எலுமிச்சை கலந்த நீர் பெரிதும் உதவியாக இருக்கின்றது தற்போது அவை எப்படி உதவுகின்றது? தயாரிப்பது எப்படி என இங்கு பார்ப்போம்

எப்படி உதவுகின்றது?

வெல்லம் வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக்குகிறது. இதனால் உங்களின் தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு நல்ல ஆதாரம்.

அதேபோல் எலுமிச்சையும் சளைத்ததல்ல. இதுவும் ஒரு அதிய கனிதான். இது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை சுத்தீகரிக்க உதவும். இதனால் உடல் எடையை குறைப்பதில் வேகமாக ஈடுபடும்.

எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பருகும்போது அதன் ஆற்றல் இன்னும் வேகமாக இருக்கும். உடல் எடையை சீக்கிரமாகவும் குறைத்துவிடலாம்.

இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி, ஸிங்க் ஆகியவையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது.
இந்த பானத்தை எப்படி தயார் செய்வது ?

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுங்கள். சிறு துண்டு வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் வெது வெதுப்பான தண்ணீரில் கலக்குங்கள்.

அவ்வளவுதான் அதன் சுவையை அனுபவித்து பருகுங்கள். உடல் எடை நீங்கள் நினைத்தது போல் குறைந்துவிடும். தேவைப்பட்டால் இதில் சில புதினா இலைகளையும் சேர்க்கலாம்.
குறிப்பு

இந்த பானம் உங்கள் உடலுக்கு ஆற்றல் தர உதவுகிறது. இதை ஈடு செய்ய நீங்கள் சுருசுருப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் இந்த பானம் விரைவில் பலன் தரும்.