சுவையான இறால் புளிகுழம்பு..!! செய்வது எப்படி!

கடல் உணவுகளில் இறாலுக்கென தனி இடம் உள்ளது. இறால் வைத்து சுவையான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

இறால் – கால் கிலோ

தக்காளி -2
பெ.வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி ,பூண்டு விழுது -சிறிதளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லித் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியையும் ஊறவைத்து கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள். அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.

நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள்.

பின்னர் இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.