தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவாஜிலிங்கம் தற்போது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக வல்வெட்த்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று முற்பகல் சென்ற நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுத்திப்படுத்தப்பட்டது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற அடிப்படையில் எம்.கே.சிவாஜிலிங்கம் காவுவண்டி மூலம் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.