இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பட்டியலில் இணைக்கப்படலாம் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும்.
2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கை மக்களின் 14 பில்லியன் ரூபாயினை அபகரித்தவர் அஜித் கப்ரால்.
அஜித் கப்ராலை நியமிப்பது இலங்கையின் அரசியல் நிலை குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மேலும் மோசமாக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுயாதீன அமைப்பை அரசியல்வாதி கைப்பற்றுவதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பட்டியலில் இணைக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.