இந்தியாவில் 6 வயது குழந்தை முன்பு நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்த டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட அந்த குழந்தையின் தாயும், பெண் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் பெண் காவலருடன் நீச்சல் குளத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், குறித்த பெண் காவலரின் 6 வயது மகளும் பக்கத்தில் இருந்த காணொளி வைரலாகியது.
குறித்த காணொளியில் இருக்கும் அதிகாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பதும், அவருடன் இருப்பவர் காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண் காவலரின் கணவர் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்த நிலையில், அப்புகாரை எடுத்துக்கொள்ளாமல் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து அவர் ராஜஸ்தான் மாநில டிஜிபியிடம் புகார் அளித்த நிலையில் உடனே நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் இருந்த பெண் காவலரை குழந்தை இருப்பதைக் காரணமாக கொண்டு கைது செய்யாமல் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளரையும் சஸ்பெண்ட் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு டிஎஸ்பி பெண் காவலருடன், அதுவும் 6 வயது குழந்தையின் கண்ணெதிரில் உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.