தற்போது பௌத்த, இந்து, இஸ்லாம் என்ற பேதத்தை மறந்து அனைவரும் இணைந்து கோவிட் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கோவிட் தொற்றின் தாக்கமானது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.