பருத்தித்துறையில் கொரோனாவுக்கு ஒரு வயது குழந்தை பலி!

யாழ்.பருத்தித்துறையில் ஒரு வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.