நடிகர் விஜய் தனது குடும்பத்தார் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார்.

இந்த கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா மற்றும் தலைவராக பத்மநாபன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் விஜய் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் அறிவிக்கப்பட்டதோடு தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சந்திரசேகர், ஷோபா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதனிடையே தந்தை தாய் உள்பட 11 பேர் மீது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.