கணவனை அடித்துக் கொன்ற மனைவி! – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 32 வயதான து.செல்வக்குமார் என்பவர் தேங்காய் திருவளையால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழழந்தவரின் மனைவி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இருவரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.