யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இறப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி 70 வயதான ஆண் ஒருவரும், 66 வயதான பெண் ஒருவரும், 58 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.