15 வயது சிறுமியை 30 மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரானான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்து நடைபெறும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படி இருக்க மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 30 மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி கூறிய பின் தான் இந்த அவலம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒருவர் அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான்.
இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என கூறி பல முறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதுமட்டுமின்றி, தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளான் அந்த கொடூரன்.
இதனை வைத்து அந்த சிறுமியை டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என பல மாவட்டங்களுக்கு மிரட்டி வரவைத்து 30 மேற்பட்டோர் கடந்த பல மாதங்களாக அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மன அழுத்ததில் இருந்துள்ளார். அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அவரை விசாரித்த பின் தான் இந்த கொடூரம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் சமூகசெயற்பாட்டாளர் ஒருவரின் உதவியுடன் காவல்துறையை அணுகி உள்ளனர். குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க நினைத்த காவல்துறையினர் அந்த சிறுமி மூலம் செல்போனில் பேசி சொல்லியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த சிறுமியை ஒரு இடத்திற்கு அழைத்து சென்ற போது அந்த லோக்கேஷனை தனது வாட்சப்பில் ஷேர் செய்துள்ளார். இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்ளாக அந்த சிறுமியை 2 வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் இருவர் மைனர் ஆவர் மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.