தமிழ் திரையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்துசமவெளி திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அமலாபால் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருடத்திற்குள் இந்த திருமணம் முடிவுக்கு வந்தது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டு தங்களது வாழ்க்கையை பார்க்கின்றனர்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்ற அமலாபாலுக்கு நிறைய ரசிகர்கள் பாலோயர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக அழகாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.