நீச்சல் குளத்தில் ஆட்டம்..! ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய அஞ்சு குரியன்

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை. இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார். வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார். கையில் ஷாம்பைன் பாட்டிலை எடுத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜிலுஜிலு வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஷேர் செய்து வருகின்றனர்.