வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்துவோருக்கு கேஷ்பேக் தொகை அளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் பே, போன் பே, அமேசான், பேடிஎம் என பல நிறுவனங்கள் தங்கள் செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு சிறிய தொகையை பரிசாக அளிப்பது அல்லது சலுகைகளை அளிப்பது மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமும் இதே பாணியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகை திட்டம் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக பணப்பரிமாற்ற சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .