மட்டக்களப்பில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலை

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சிறுமியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பெற்றோர் வெளியில் சென்றதையடுத்து உயிரிழந்த சிறுமியும், அவரது சகோதரியும் வீட்டில் இருந்துள்ள சந்தர்ப்பத்தில், சகோதரி குளியலறையிலிருந்து வந்து பார்த்த போது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம் சகோதரி தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்று வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.