அமெரிக்க டொலர்களில் வரி செலுத்த ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான யோசனையை தங்கள் சங்கமே முன்வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அமெரிக்க டொலரில் வரி செலுத்த ஒப்புக்கொண்டவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அந்த யோசனை ஆராயப்படும் என்ற போதிலும் அது செயற்படுத்தப்படாதென இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரென்சிகே தெரிவித்துள்ளார்.
மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பித்த பின்னர் வாகனத்தின் விலை 60 – 70 வீதம் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.