இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் கூறினார்.
ஆஸ்திரிய நிறுவனத்திற்கு இந்த பொறுப்பை கையளிக்க ஏதும் திட்டம் உள்ளதா? என வினவியதற்கு அவர் பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்
சாரதி அனுமதி பத்திரம் அச்சிட தேவையான அட்டைகள் ஆஸ்திரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
2019 டிசம்பர் இறுதி வரை தனியார் நிறுவனம் ஒன்றினாலே இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. மெட்ரோபொலிடன் நிறுவனத்தின் கீழ் பல ஆண்டுகளாக ஒப்பந்தம் இல்லாமல் அச்சிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனவரி 01 முதல் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 மில்லியன் சேமிக்க முடியும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.