உலகின் மிகப்பிரபலமான முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான Rolls-Royce, தங்களுடைய முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சொகுசு கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற Rolls-Royce நிறுவனம் மின்சார காரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இதன்படி நேற்று மின்சார காரை அறிமுகப்படுத்தியது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் முந்தைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருந்த அனைத்து விதமான வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காரின் விலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.