பிரான்சில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கான தடுப்பூசியின் மூன்றாவது டோஸேஜ் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது டோஸேஜ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வேறு தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் நோய் தோற்று அபாயம் அதிகம் உள்ளதால். மூன்றாவது டோஸேஜ் தடுப்பூசி செலுத்துவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தற்போது வரையில் 37 சதவீத மக்கள் மூன்றாவது டோஸேஜ் செலுத்திக்கொள்வதில் முன்னுரிமையாக இருந்தபோதும். இந்த தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகமானது போதாது என கருதிய அந்நாட்டு அரசு விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.