அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி கொள்கை குறித்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கடுமையான பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ளும் கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, 623 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.